அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
தமிழில் பெரிய வெற்றிக்காக துாண்டிலை போட்டு காத்திருந்த ராதிகா ஆப்தேவுக்கு, பெரிய மீன் சிக்கியுள்ளது. ஆம்; ரஜினியின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம் ராதிகா. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி, மலையாளம் என, பல மொழிகளிலும் நடித்து வந்தாலும், இதுவரை பெயர் சொல்லும் அளவுக்கு இவருக்கு படங்கள் அமையவில்லை. இந்நிலையில் தான், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில், ராதிகாவுக்கு பம்பர் பரிசு அடித்துள்ளது. தற்போது, இந்தியில் மூன்று, பெங்காலியில் ஒன்று, ஒரு ஆங்கில படம் என, கணிசமான படங்களை கைவசம் வைத்துள்ளார் ராதிகா. 'உலா' என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். ரஜினியுடன் ஜோடி சேரப்போகும் ராதிகாவின் திரையுலக வாழ்வில் திருப்புமுனை ஏற்படுமா என, பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படத்திற்கு, 'காளி' என, பெயர் வைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.